மங்கோலிய பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கையில் அங்கீகாரம் பெற்ற, இந்தியாவில் உள்ள மங்கோலிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் சயாத் ஒட்சுரேன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 செப்டம்பர் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.