செய்தி சிறப்பம்சங்கள்

சமீபத்திய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகளுக்காக மியான்மருக்கு அனுப்பப்பட்ட முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு, தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இன்று (ஏப்ரல் 26, 2025) இலங்கைக்கு நாடு திரும்பியது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கொமடோர் ஜனக குணசீல அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஏப்ரல் 23 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


சர்வதேச பயிற்சிக்குரிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் ரைபிள் தேசிய நிலை III-2025 போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்களான இராணுவ துப்பாக்கிச் சூடு வீரர்களின் சிறந்த செயல்திறனை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பாராட்டு விழாவில் பாராட்டினார்.


இலங்கை இராணுவம் ஸ்ரீ தலதா மாளிகை பக்தர்களுக்கு தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தனது அர்ப்பணிப்பு மிக்க ஆதரவைத் வருடாந்தம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.


சமீபத்திய இடம் பெற்ற அனர்த்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கையிலிருந்து ஒரு விசேட முப்படைகளின் குழு மியான்மருக்கு சென்றடைந்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான உதவி அனர்த்த


இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமாண்டர் குபோ தகாயுகி ஜேஎம்எஸ்டிஎப் ஆகியோர் 2025 ஏப்ரல் 22, அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


35 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விடிஎஸ் பெரேரா அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை பீரங்கிப் படையணி தனது 137வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஏப்ரல் 19 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கொண்டாடியது.


திருகோணமலை வழங்கல் பாடசாலையில் 2025 ஜனவரி 06 முதல் 2025 ஏப்ரல் 02 வரை நடாத்தப்பட்ட உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண். 7 வெற்றிகரமாக 99 அதிகாரிகளின் பங்கேற்புடன் நிறைவடைந்தது.


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (2025 ஏப்ரல்16) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.