2nd October 2025
இராணுவத் தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜீ.பீ.எஸ்.கே. அபேசிங்க அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 செப்டம்பர் 30, அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
மேஜர் ஜெனரல் ஏ.எம்.கே.ஜீ.பீ.எஸ்.கே. அபேசிங்க அவர்கள் 1990 செப்டம்பர் 07 ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ கல்வியற்கல்லூரி 2 ஆம் அணியில் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற்கல்லூரி மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1991 மார்ச் 13 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியில் பணியமர்த்தப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2024 ஜனவரி 01 திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார்.
சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 07 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். இலங்கை இராணுவத்தில் நிதி முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் தளபதி ஆகிய நியமணங்களை வகிக்கின்றார்.
தனது பணிக்காலத்தில், 1வது விஜயபாகு காலாட் படையணி, 21வது காலாட் பிரிகேட் மற்றும் போர் பயிற்சிப் பாடசாலையின் குழு தளபதி, சம்பளம் மற்றும் பதிவேடுகள் பணிப்பகத்தின் பணி நிலைஅதிகாரி 3, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பியிலிளவல் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், சம்பளம் மற்றும் பதிவேடுகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணி நிலைஅதிகாரி 2 (வழங்கல்), கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் (சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள்) பொதுப் பணி நிலை அதிகாரி 2, விசேட அதிரடிபடை 3 பணி நிலை அதிகாரி 2 (நிர்வாகம், முழு செயல்பாட்டுக் கட்டளையின் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி), 11 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி), இராணுவ பயிற்சி கட்டளையின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி), இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1, 1 வது மற்றும் 4 வது இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையக பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 55 வது காலாட் படைப்பிரிவின் கேணல் (நிர்வாகம் மற்றும் விடுதி), (வடமத்திய) முன்னரங்க பராமரிப்பு பகுதி கேணல், இலங்கை இராணுவ பொது சேவை படையணி தொழில்முறை பயிற்சி பாடசாலையின் தளபதி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி நிலைய தளபதி, இராணுவ நலன்புரி நிதி பணிப்பக பணிப்பாளர், இராணுவ ஊதியம் மற்றும் சம்பள பணிப்பக பணிப்பாளர், இராணுவ தலைமையக வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை இராணுவ பொது சேவை படையணி படைத்தளபதி மற்றும் இராணுவ தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகிய நியமனங்களை அவர் வகித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி, ஆயுதப் படைகளுக்கான ஆயுத மோதல் சட்டம் குறித்த பயிலிளவல் மேம்பட்ட பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் உயர் பாடநெறி, தேசிய இராணுவ சட்ட அமுலாக்க பாடநெறி மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி ஆகிய பாடநெறிகளை அவர் பயின்றுள்ளதுடன், வெளிநாட்டு பாடநெறிகளில் அவர் பாகிஸ்தானில் மலையேறுதல் பாடநெறியைப் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.