13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025ல் இலங்கை இராணுவம் பிரகாசிப்பு

13 வது பாதுகாப்பு சேவைகள் தடகள சாம்பியன்ஷிப் 2025 செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் 45 தங்கப் பதக்கங்களில் 39 தங்கப் பதக்கங்களைப் பெற்றது. மேலும் ஒன்பது புதிய போட்டி சாதனைகளைப் படைத்தது, தடகளத் துறையில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியும் மற்றும் இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் பி.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் முப்படைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.