53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 32 வது தளபதியான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி தனது கடமைகளை ஒப்படைத்தார்.
தேசத்தின் பாதுகாவலர்
53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 32 வது தளபதியான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி தனது கடமைகளை ஒப்படைத்தார்.
இலங்கை கவச படையணியின் பிரிகேடியர் வை.எச்.பீ ரங்கஜீவ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் அவர்கள் 2025 ஆகஸ்ட் 06 அன்று இராணுவத் தலைமையகத்தில் காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் 27 வது பணிப்பாளராக கடமை ஏற்றுக்கொண்டார்.
இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் 11 வது ஆண்டு நிறைவை 2025 ஜூலை 31, அன்று தொடர்ச்சியான நிகழ்வுகளுடன்,இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
2025-08-04
முதலாம் படையின் 7வது தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஆகஸ்ட் 03 அன்று கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் முறையான இராணுவ நிகழ்வின் போது தனது கடமை விலகினார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, 2025 ஜூலை 30 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் ஒரு முறையான விழாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மேத்யூ ஹவுஸ் அவர்கள் 2025 ஜூலை 26 அன்று 22 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களை 22 வது காலாட் படைப்பிரிவில் சந்தித்தார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஓய்வுபெறும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 ஜூலை 28, அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் கௌரவ வைத்தியர் சிரி வால்ட் அவர்கள், 2025 ஜூலை 29 அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவு, தனது 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி தொடர்ச்சியான நினைவு நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
22 வது காலாட் படைப்பிரிவு, அதன் 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி அதன் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான இராணுவ சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.