நல்லதண்ணி லக்சபான தேயிலை தொழிற்சாலை தீடீர் தீ அணைப்பிற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு

நல்லதண்ணி பகுதியில் உள்ள லக்சபான தேயிலை தொழிற்சாலையில் 2025 ஒக்டோபர் 09 அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

642 வது காலாட் பிரிகேடின் அறிவுறுத்தலுக்கமைய 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குத் விரைந்து தீயணைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பின்னர் ஹட்டன் நகர சபையைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வாகனமும் தீயணைப்புக் குழுவும் இந்த நடவடிக்கையில் இணைந்தன. இராணுவத்தினர், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தீயணைப்புக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால், வெற்றிகரமாகக் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.