இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, இலங்கை இராணுவ பௌத்த சங்கத்துடன் இணைந்து 2025 ஜூன் 10 ம் திகதி அன்று பனாகொடை ஸ்ரீ மஹா போதிராஜராமையில், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 'சீல சமாதி' நிகழ்வு ஏற்பாடுடன் பொசன் பௌர்ணமி தினத்தைக் கொண்டாடியது.


221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஈ.டபிள்யூ.ஆர்.எஸ்.பி எஹெலேபொல யூஎஸ்பீ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 221 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஜூன் 10 ஆம் திகதி திருகோணமலை, பிரெட்ரிக் கோட்டை, கோகண்ண ரஜமகா விஹாரையின் முன், கொண்டைக்கடலை அவியல் தானம் வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களை ஆசிர்வதிக்கும் வகையில், கொமாண்டோ படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் கே.வி.ஐ.எல். ஜயவீர யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ராகம போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் இணைந்து, கொமாண்டோ படையணி வளாகத்தில் 2025 ஜூன் 11 ஆம் திகதி இரத்த தான முகாமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2025 ஜூன் 11 ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு முன்பாக, சமஹன் பாணம் வழங்கினர்.


12 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ்.என் ஹேமரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 2025 ஜூன் 04 அன்று 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதியும், பாடசாலையின் புகழ்பெற்ற பழைய மாணவருமான மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து ஆற்றிய சேவையைப் பாராட்டி, குளியாப்பிட்டி சாரநாத் கல்லூரி, 2025 மே 15 அன்று சிறப்புப் பாராட்டு விழாவை நடத்தியது.


பிரிகேடியர் சி.பீ விக்ரமசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025 மே 28 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.


'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற தொனிப்பொருளுடன் 2025 ஜூன் 05, அன்று உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு இணையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ நிறுவனங்களில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு பங்களிப்பு வழங்கினர்.


‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி ஜூன் 04, 2025 அன்று மன்னார் நகர சபை உள்ளக மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முதற்கட்ட போட்டிகள் 2025 மே 20 அன்று நடைபெற்றன.


இராணுவத் தலைமையக உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் ஆர்எம் பாலசூரிய யூஎஸ்பீ அவர்கள் 2025 ஜூன் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.