இராணுவ சிறப்பம்சம்

மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்வீ பெர்னாண்டோ யூஎஸ்பீ என்டிசீ ஐஜீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவின் 21 வது படைபிரிவு தளபதியாக 2025 ஜூலை 01 அன்று பூசாவில் உள்ள 61 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் முறையான இராணுவ சம்பிரதாயத்திற்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


வழங்கல் கட்டளை தலைமையக படையினரால் 2025 ஜூலை 01, அன்று பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியில், வெளிசெல்லும் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களுக்கு பிரியாவிடை வழங்குவதற்கான ஒரு முறையான விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 22 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 30 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வெளியேறும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசீ அவர்களுக்கு 2025 ஜூன் 28, அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.


56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.என்.டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் புதிய படைத்தளபதியாக 2025 ஜூன் 26, அன்று கரந்தெனிய இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேயவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 58 வது காலாட் படைப்பிரிவின் 22 வது தளபதியாக 2025 ஜூன் 26 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூலை 01, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.


மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 15 வது படைத் தளபதியாக 2025 ஜூன் 27, அன்று இலங்கை இராணுவ வைத்திய படையணி தலைமையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் ஏஎம்சீ அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 29 அன்று மன்னார் 54 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 54 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ வைத்திய படையணியின் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு இலங்கை இராணுவ வைத்திய படையணி வளாகத்தில் 2025 ஜூன் 24, அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.