இராணுவ சிறப்பம்சம்

இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் போர் வீரர்களில் ஒருவரான, ஆனையிறவு முகாமின் பாதுகாப்பிற்காக 34 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரைத் தியாகம் செய்த, இலங்கை சிங்கப் படையணியின் மறைந்த கோப்ரல் காமினி குலரத்னவை 2025 ஜூலை 14 அன்று 6 வது இலங்கை சிங்க படையணி ஆனையிறவு வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னால் ஏற்பாடு செய்த விழாவின் போது நினைவுகூர்ந்தனர்.


பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமான திம்புலாகல வன மடாலயத்திற்கு கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் 2025 ஜூலை 09 அன்று விஜயம் செய்தார்.


மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 14வது படைத் தளபதியாக 2025 ஜூலை 11 ம் திகதி பொல்ஹெங்கொட படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை சிங்க படையணியின் கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 2025 ஜூலை 11, அன்று கொக்காவில் நடைபெற்றது.


2025 ஜூலை 10 அன்று மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து 94 வயது முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


2025 ஜூலை 06 ஆம் திகதி அனுராதபுரம், பந்துலகம, விஹாரபலுகம வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை 212 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினர் விரைவாக செயற்பட்டு அனைத்தனர்.


பலாங்கொடை கோங்கஹவெல பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் உடனடியாகக் அணைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர்.


மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஏ.பி. விஜேகோன் யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக 2025 ஜூலை 01 ஆம் திகதி இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.


மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 56 வது இராணுவ செயலாளராக 2025 ஜூலை 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.


இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 27 வது படைத் தளபதியாக 2025 ஜூலை 02 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.