2nd October 2025
இலங்கை சிங்க படையணி தனது 69வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடியது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதித் தளபதியும், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸபீ அவர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பிரதாய அணிவகுப்பும் நடைபெற்றது. பின்னர், படையணியின் படைத் தளபதி அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார்.
பின்னர், வீரமரணமடைந்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் போர் வீரர்கள் நினைத் தூபியில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மஹா ஓயா பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கொங்ரீட் வீதி திறந்து வைக்கப்பட்டது.
வீதி புணரமைப்பிற்கு பங்களித்த வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.