கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுத் தலைவி திருமதி அஞ்சலிக் அப்பேரூக்ஸ் அவர்கள் 2026 ஏப்ரல் 08 அன்று யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
இராணுவ சிறப்பம்சம்
பிரிகேடியர் என்.டபிள்யூ.பீ.எஸ்.எம். பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 06 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 18 வது படைத்தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவ வீரரின் நேர்மையான சேவைக்கு பாராட்டு
2026-04-08
இலங்கை இராணுவ ஊடக மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தில் பணியாற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.கே.பீ.கே. ரத்நாயக்க புறக்கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில், 80,000 ரூபாய் மற்றும் பல பெறுமதிமிக்க ஆவணங்கள் அடங்கிய தொலைத்த பணப்பையை, அதன் உரிமையாளரான மியன்மார் பௌத்த பிக்குவிடம் 2026 ஏப்ரல் 07 அன்று கொடகம புராண விகாரையில் கையளித்தார்.
மேஜர் ஜெனரல் ஏ.எம்.சீ. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில், இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமாக கடமை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக்க பீஎஸ்சீ பீடீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 அன்று படையணி தலைமையகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் 17 வது படைத்தளபதி பதவியிலிருந்து தனது கடமைகளைத் துறந்தார்.
பிரிகேடியர் எம்.என்.ஜே. பெரேரா அவர்கள் 2026 ஏப்ரல் 02 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் கே.டீ.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 வது தளபதியாக கடமை பெறுப்பேற்றார்.
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, 2026 ஏப்ரல் 03 அன்று, யாழ். பாதுகாப்புப் படைகள் சார்பில் இராணுவ சாம்பிரதாய விழா ஒன்றில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
ஓய்வுபெறும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களைக் கௌரவிக்கும் வகையில், 2026 ஏப்ரல் 02 அன்று பனாகொடையில் உள்ள படையணி தலைமையகத்தில் ஒரு முறைப்படியான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.