11th October 2025
57 வது காலாட் படைப்பிரிவின் 19 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.எம்.வி. கொடிதுவக்கு என்டியூ அவர்கள் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி 57 வது காலாட் படைப்பிரிவில் கடமை பொறுப்பேற்றார்.
புதிய தளபதியை படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர். மேலும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் புதிய தளபதி, படைப்பிரிவின் அனைத்து நிலையினருக்குமான உரையில் தனது தொலைநோக்குபார்வை மற்றும் எதிர்கால திட்டங்களை தெரிவித்தார். அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தன.