இராணுவ சிறப்பம்சம்

வரவு செலவு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ். டி சில்வா அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 19 வது படைத்தளபதியாக 2025 அக்டோபர் 08 அன்று இலங்கை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பிரிகேடியர் டீ.ஜி.என். டி சில்வா அவர்கள் சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்தின் 23வது பணிப்பாளராக 2025 அக்டோபர் 08 அன்று பனாகொடை இராணுவ முகாமில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


57 வது காலாட் படைப்பிரிவின் 19 வது தளபதியாக மேஜர் ஜெனரல் கே.எம்.வி. கொடிதுவக்கு என்டியூ அவர்கள் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி 57 வது காலாட் படைப்பிரிவில் கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 38 வது வழங்கல் கட்டளைத் தளபதியாக 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் எல்.ஆர். விஜேரத்ன யூஎஸ்பீ அவர்கள் 2025 ஒக்டோபர் 07 ஆம் திகதி பனாகொடை விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


நல்லதண்ணி பகுதியில் உள்ள லக்சபான தேயிலை தொழிற்சாலையில் 2025 ஒக்டோபர் 09 அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது பிரிகேடியர் கே.ஏ.ஆர்.கே. டயஸ் யூஎஸ்பீ அவர்கள் 22 வது மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.


76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் தொடர்ச்சியான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.


பிரிகேடியர் கே.எம்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள், 2025 செப்டம்பர் 25 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான விழாவில், போர் கருவி பணிப்பக பணிப்பாளராக கடமை பொறுப்பேற்றார்.