28th September 2025
76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் தொடர்ச்சியான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.
இந்த முயற்சிகளுடன் இணைந்து, புனித ஜய ஸ்ரீ மகா போதியில் கொடி ஆசீர்வாத விழா 2025 செப்டம்பர் 26 அன்று நடைபெற்றது. எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் அவர்களின் வேண்டுகோளின் பேரில், இராணுவம் மெத மலுவவில் கற்களை நாட்டுவதையும், சன்னிபாத மண்டபத்தில் நிறப்பூச்சி தீட்டலையும் மேற்கொண்டது.
இந்தப் பணிகள் வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 21வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையுடன் நிறைவு செய்யப்பட்டன.
212 வது காலாட் பிரிகேடின் கீழ் இயங்கும் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி மற்றும் 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினாரால், 2 வது பொறியியல் சேவை படையணி படையினரின் தொழின்முறை நிபுணத்துவத்துடன் இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.