10th March 2025
ஸ்ரீ கவிஸ்வர வேலுவனராம ஸ்ரீ சுகத தர்மோதய தர்மப் பாடசாலையின் மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா 2025 மார்ச் 02 அன்று விகாரை வளாகத்தில் நடைபெற்றது. 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வண. பிரதம தேரரின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது, புதிய மாணவ தலைவர்களுக்கு சின்னங்களை தளபதி அணிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உரையாற்றிய அவர், வலுவான தலைமைத்துவம் என்பது ஒழுக்கம், பொறுப்பான மற்றும் திறமையான தலைவர்களை வளர்ப்பதில் தங்கியுள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
தர்மப் பாடசாலையின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.