4th March 2025
கந்தேகெதர சாரண்யா தமிழ் பாடசாலையில் தூய இலங்கை திட்டத்தில் பங்கேற்ற 1 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2025 மார்ச் 03 அன்று பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒருவரை மீட்டுள்ளனர்.
112 வது காலாட் பிரிகேடின் படையினர் சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த அவசரநிலை குறித்த செய்தி கிடைத்தது. பின்னர் விரைவாகச் செயல்பட்டு, மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு நிலச்சரிவில் சிக்கியவரை காப்பாற்றினர்.
மீட்கப்பட்ட நபருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.