23 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மெத்தைகள் மற்றும் தென்னம் பிள்ளை நன்கொடை

23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈ.எ எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் கிளிநொச்சியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 40 மெத்தைகள் மற்றும் 40 தென்னம்பிள்ளைகளை நன்கொடையாக வழங்கினர். மாவனெல்ல திரு. சுமேத மோலிகமுவ அவர்களின் நிதியுதவியில் இந்த முயற்சி சாத்தியமானது.

இந்த விநியோக நிகழ்வு 2025 மார்ச் 2 ஆம் திகதி கிளிநொச்சி, வேம்படிகேனி சீசீ தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வீடிஎஸ் பெரேரா அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, 40 வறிய குடும்பங்களுக்கு உடனடி ஆறுதல் மற்றும் நீண்டகால பொருளாதார ஆதரவை வழங்குவதற்காக தனிப்பட்ட முறையில் நன்கொடைகளை வழங்கினார்.