இராணுவ சிறப்பம்சம்

பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் 48வது தளபதியாக 2025 ஒக்டோபர் 31 அன்று சுருக்கமான நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.


இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 35வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 01 அன்று குருநாகல் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.


இலங்கை சிங்க படையணியின் மறைந்த கேணல் ஆர்.ஏ.என்.பீ ரணவீர (ஓய்வு) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 நவம்பர் 01 அன்று, கொட்டாவை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.


பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) 2025 நவம்பர் 01 அன்று நாரஹேன்பிட்டி இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.


கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 22வது ஆண்டு நிறைவை 2025 அக்டோபர் 31 அன்று வெலிகந்தையில் உள்ள தலைமையக வளாகத்தில் கொண்டாடியது.


பிரிகேடியர் பி.ஏ.பீ. லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள், 2025 ஒக்டோபர் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


இலங்கை இராணுவ சேவைப் படையணி தனது 76வது ஆண்டு நிறைவை 2025 ஒக்டோபர் 30 அன்று பனாகொடை படையணி தலைமையகத்தில் மிக சிறப்பாக கொண்டாடியது.


கேணல் ஆர்ஏஎன்பீ ரணவீர (ஓய்வு) அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகவீனம் காரணத்தால் 2025 ஒக்டோபர் 29, அன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 55 வயது ஆகும்.


மேஜர் ஜெனரல் எம்.டபிள்யூ.எஸ். மில்லகல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் உத்தியோகப்பூர்வமாக கடமை பொறுப்பேற்றார்.


59 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி 59 வது காலாட் படைப்பிரிவில் ஏற்பாடு செய்திருந்தனர்.