இலங்கை பொறியியல் படையணியின் 74 வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை பொறியியல் படையணி, தனது 74 வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 7 முதல் 14 ஆம் திகதி வரை பனாகொடை படையணி தலைமையகம் மற்றும் மத்தேகொட சப்பர் இல்லத்திலும் தொர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

படையணி போர் வீரர்கள் நினைவுதூபியில் 655 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சம்பிரதாய நிகழ்விற்கமைய பெரஹெரா மற்றும் பிரித் பாராயணத்தை தொடர்ந்து அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட கலாசார மற்றும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன.

ஆண்டு நிறைவு நாளில், படையணியின் படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து படையினருக்கு உரை நிகழ்தப்பட்டது. மேலும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு, அதிகாரிகளின் ஒன்றுகூடல், அதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் சார்ஜன் விடுதியில் இரவு உணவு மற்றும் அனைத்து நிலையினருக்கான ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.