தலகொல்ல விபத்தின் மீட்பு பணியில் இராணுவத்தினரின் உதவி

தலகொல்ல, ரம்புக்கனை-மாவனெல்ல வீதியில் 2025 நவம்பர் 23 அன்று பயணித்த முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதையடுத்து இராணுவத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

57 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் கீழ் இயங்கும் 8 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

படையினர் உடனடியாக செயற்பட்டு சேதமடைந்த முச்சக்கர வண்டிக்குள் சிக்கிய நான்கு நபர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட நபர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்ல தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.