25th November 2025
2025 நவம்பர் 24 ஆம் திகதி பாணந்துறை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பிரதான கட்டிடம் மற்றும் அருகிலுள்ள கலஞ்சியசாலை என்பன பெரும் சேதமடைந்தது. களுத்துறை மற்றும் மொரட்டுவை விமானப்படை தளத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர், 1 வது இலங்கை முன்னோடிப் படையணியின் படையினருடன் இணைந்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவிய தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.