19th November 2025
2025 நவம்பர் 19 ஆம் திகதி ஒஹியவிற்கும் இடல்கஷ்ஹின்னவிற்கும் இடையில் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாறை சரிவினால் ஒரு புகையிரத இஞ்சின் சேதமடைந்துள்ளதுடன் பாறை சரிவினால் தண்டவாளம் முற்றிலுமாகத் மூடப்பட்டு, அனைத்து புகையிரத போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 112 வது காலாட் பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக இடிபாடுகளை அகற்றினர். அவர்களின் விரைவான முயற்சியினால் புகையிரத போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.