இராணுவ சிறப்பம்சம்

பரகஹதெனிய, மாவத்தகம தலைக்கவசங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


11 வது காலாட் படைப்பிரிவு அதன் 16 வது ஆண்டு நிறைவை 2026 பெப்ரவரி 15 அன்று 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.


யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயர் அதி வண. கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களை பிஷப் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


பிரிகேடியர் எம்.ஜே. உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது காலாட்படை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.


பிரிகேடியர் எ.பீ.எ.டி.டி தர்மகீர்த்தி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இராணுவத்தின் புதிய ஆளணி நிர்வாக பணிப்பாளராக 2026 பெப்ரவரி 09 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


5வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் பி.எ.டி சமன் தேவபிரிய யூஎஸ்பீ அவர்கள் 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மத பக்தியை கௌரவிக்கும் வகையில் 2026 பெப்ரவரி 05 அன்று பாதயாத்திரை மேற்கொண்டார்.


553 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி 553 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அவர்களை கௌரவித்தது.


மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத்தின் 42 வது நிறைவேற்றுபணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 27 அன்று இராணுவ தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஜனவரி 26 பலாலி இந்திய அமைதிப் காக்கும் படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது.


மேஜர் ஜெனரல் கேடீபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 34 வது தளபதியாக கடமையை பொறுப்பேற்றார்.