இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தனது 5 ஆம் ஆண்டு நிறைவை கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி கொண்டாடியது.
தேசத்தின் பாதுகாவலர்
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தனது 5 ஆம் ஆண்டு நிறைவை கரந்தெனிய படையணி தலைமையகத்தில் 2026 ஜனவரி 04 ஆம் திகதி கொண்டாடியது.
விசேட படையணி தலைமையகம் தனது 29 வது ஆண்டு நிறைவை 2026 ஜனவரி 03 அன்று, படையணி தலைமையகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
2026-01-06
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் முதலாம் படையின் 9 வது தளபதியாக 2026 ஜனவரி 05 ஆம் திகதி தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின்போது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் எம்.ஆர். ஹமீம் யூஎஸ்பீ அவர்கள் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வில், 11 வது இலங்கை இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பாளராக 2026 ஜனவரி 02 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் டபிள்யூ.எஸ் ரவிந்தர குமார யூஎஸ்பீ ஐஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2026 ஜனவரி 01 அன்று கடமைகளை பெறுப்பேற்றார். கடமைகளை ஏற்றுகொண்ட புதிய பணிப்பாளர் படையினருக்கு உரையாற்றினார்.
மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவின் 30 வது தளபதியாக 2026 ஜனவரி 02 அன்று கடமை பொறுப்பேற்றார்.
பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 29 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் எம்.கே.டி.பீ. மாபலகம பீஎஸ்சீ அவர்கள் 2025 டிசம்பர் 22 அன்று இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவ நடவடிக்கைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ 2026 டிசம்பர் 01 அன்று கிரிபத்கொட தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுகவீனம் காரணமாக காலமானார்.
பிரிகேடியர் ஐ.எச்.எஸ்.விஜேசேன (ஓய்வு) 2025 டிசம்பர் 30 அன்று விபத்தில் சிக்கி காலமானார். இறக்கும் போது அவருக்கு 60 வயது ஆகும்.