‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி ஜூன் 04, 2025 அன்று மன்னார் நகர சபை உள்ளக மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முதற்கட்ட போட்டிகள் 2025 மே 20 அன்று நடைபெற்றன.
தேசத்தின் பாதுகாவலர்
‘பாதுகாப்புப் படை (வன்னி) தளபதி சவால் கிண்ண கரப்பந்து – 2025’ போட்டி ஜூன் 04, 2025 அன்று மன்னார் நகர சபை உள்ளக மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முதற்கட்ட போட்டிகள் 2025 மே 20 அன்று நடைபெற்றன.
இராணுவத் தலைமையக உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கேணல் ஆர்எம் பாலசூரிய யூஎஸ்பீ அவர்கள் 2025 ஜூன் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
பிலியந்தலை போகுந்தர சந்திக்கு அருகிலுள்ள தேவ்மினி மரக்கடையில் 2025 ஜூன் 04, அன்று தீ விபத்து ஏற்பட்டது. கிடைத்த தகவலுக்கமைய 5 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் தீயணைப்பிற்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர்.
கூரகல பிஹிம்பியகொல்ல வனப்பகுதியில் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் விரைவாக அனுப்பப்பட்டனர். இத்திட்டம் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
பிரிகேடியர் கே.எம்.என்.ஏ.டபிள்யூ.கே. பெரேரா ஏஏடிஓ அவர்கள் முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2025 ஜூன்...
இலங்கை பொறியியல் படையணி, மேஜர் ஜெனரல் டி.சி. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் நிறைவு குறிக்கும் வகையில் 2025 மே 29 ஆம் திகதி பிரியாவிடை அளித்தது.
பிரிகேடியர் கேஏடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் , 2025 மே 29 அன்று பனாகொடை இராணுவ விளையாட்டு பணிப்பகத்தில் 17வது விளையாட்டு பணிப்பாளராக உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார்.
61 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 61 வது காலாட் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காலி சம்போதி சிறுவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 50 சிறப்பு தேவையுடையோருக்கான சமூக சேவைத் திட்டத்தை 2025 மே 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில், காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தினர்..
இலங்கை இராணுவத்தின் 16 வது ஒழுக்க பணிப்பாளர் நாயகமாக பிரிகேடியர் ஏ.எம்.ஆர். அபேசிங்க என்டிசீ அவர்கள் 2025 மே 29 ஆம் திகதி இராணுவத் தலைமையக ஒழுக்க பணிப்பக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
தேசிய போர்வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணம் 2025 மே 29 அன்று மைலப்பிட்டிய போர்வீரர்கள் நினைவுத் தூபியில் போர்வீரர்களை நினைவுகூர்ந்தது.