விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 17 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
தேசத்தின் பாதுகாவலர்
விஜயபாகு காலாட் படையணியின் பிரிகேடியர் கே.எல்.ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2025 ஜூன் 17 அன்று மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக 2025 ஜூன் 12 ஆம் திகதி 12 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமை பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 21வது காலாட் படைப்பிரிவின் 43 வது தளபதியாக 2025 ஜூன் 13 ம் திகதியன்று 21 வது காலாட் படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ புலனாய்வுப் படையினரும், நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து 2025 ஜூன் 15 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரையில் சுமார் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
போசன் பௌர்ணமி தினத்தை நினைவுகூரும் வகையில், அபிமன்சலவின் தளபதி பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கம்புருபிட்டிய அபிமன்சல II நல விடுதியில் சிறப்பு ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. இந்த முயற்சி, உள்நாட்டு போர் வீரர்களின் ஆன்மீக மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொடர்ச்சியான மறுவாழ்வு பயணத்தை ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஈ.எம்.ஜீ.ஏ. அம்பன்பொல அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய உபகரண பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.
சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பலாங்கொடை ராஜாவாக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பலாங்கொடை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து விழுந்த மரங்களை அகற்றி பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி...
கெந்தலந்த அதிகாரிகள் திருமண விடுதி வளாகத்தில் வசிக்கும் அதிகாரிகளின் குடும்பத்தினர் 2025 ஜூன் 11, அன்று கந்லந்த அதிகாரி திருமண விடுதி வளாகத்தின் முன் ஐஸ்கிரீம் மற்றும் தேநீர் தானம் வழங்கினர்.
54வது காலாட் படைப்பிரிவின் படையினர், அதன் கீழ் உள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுடன் இணைந்து 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 ஜூன் 10 முதல் 12 வரை தல்லடி சந்தி அருகே மன்னார் பொசன் வலயம் 2025 யை ஏற்பாடு செய்திருந்தனர்.