கூரகல மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ இராணுவத்தினரால் அணைப்பு

கூரகல பிஹிம்பியகொல்ல வனப்பகுதியில் 2025 ஜூன் 03 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் விரைவாக அனுப்பப்பட்டனர். இத்திட்டம் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அதே நாளில், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் பண்டாரவளை தோவ விகாரை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தங்கள் ஆதரவை வழங்கி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.