இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக 2025 ஜூன் 30, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


மறைந்த மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 ஜூன் 30, அன்று பொரளை பொது மயானத்தில் இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான இராணுவ வீரர்கள், பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தேசத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவித்தனர்.


பிரிகேடியர் ஏ.பீ.டி எதிரிசூரிய (ஓய்வு) கேஎஸ்வீ அவர்கள் 2025 ஜூன் 28 அன்று சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலனமானர். அவர் இறக்கும் போது வயது 88.


11 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் 54வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ விஜயரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 27 ஆம் திகதி இராணுவ மரபுகளுக்கு இணங்க 54 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த்து.


58 வது காலாட் படைப்பிரிவு படையினரால் வெளிச்செல்லும் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுடிருந்தது.


அவசரகால சூழ்நிலைக்கு விரைவாக பதிலளித்து, 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 2025 ஜூன் 29 ஆம் திகதி அதிகாலையில் ஹந்தான மலைத்தொடரில் சிக்கித் தவித்த நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கினர்.


மேஜர் ஜெனரல் டீ.ஏ பீரிஸ் (ஓய்வு) பீடீஎஸ்சி அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2025 ஜூன் 27 அன்று காலமானார். அவர் இறக்கும் போது வயது 55.


மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கஜபா படையணியின் 15வது படைத்தளபதியாக 2025 ஜூன் 26 அன்று கஜபா படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


கமாண்டோ படையணியின் மேஜர் ஜெனரல் டீ.சி.என்.ஜி.எஸ்.டீ கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக 2025 ஜூன் 24 அன்று பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.


11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், வெளிச்செல்லும் 11வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு 2025 ஜூன் 21 ஆம் திகதி 11 வது காலாட் படைப்பிரிவில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.