3rd June 2025
பிரிகேடியர் கேஏடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் , 2025 மே 29 அன்று பனாகொடை இராணுவ விளையாட்டு பணிப்பகத்தில் 17வது விளையாட்டு பணிப்பாளராக உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நியமனத்திற்கு முன்பு, அவர் இராணுவத் தலைமையகத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
நிகழ்வில், அவர் தனது தொலைநோக்கு, மூலோபாய இலக்குகள் மற்றும் தனது நியமனத்துடன் தொடர்புடைய பொறுப்புகளை எடுத்துரைத்து படையினருக்கு உரையாற்றினார்.