5th June 2025
பிலியந்தலை போகுந்தர சந்திக்கு அருகிலுள்ள தேவ்மினி மரக்கடையில் 2025 ஜூன் 04, அன்று தீ விபத்து ஏற்பட்டது. கிடைத்த தகவலுக்கமைய 5 வது இலங்கை பொறியியல் படையணி மற்றும் 1 வது இலங்கை இராணுவ போர் கருவி படையணி படையினர் தீயணைப்பிற்கு உதவுவதற்காக அனுப்பப்பட்டனர். 20 பேர் கொண்ட இரண்டு குழுக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுடன் இணைந்து தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அவர்களின் சரியான நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தீயைக் கட்டுப்படுத்துவதிலும், மேலும் சேதத்தைத் தடுப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தன.
இராணுவத்தின் செயற்பாடு 14 வது காலாட் படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ், சிவில் அவசரகால பதிலளிப்பு நிறுவனங்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.