61 வது காலாட் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

61 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 61 வது காலாட் படைப்பிரிவின் 17 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காலி சம்போதி சிறுவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 50 சிறப்பு தேவையுடையோருக்கான சமூக சேவைத் திட்டத்தை 2025 மே 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில், காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தினர்..

இந்த நிகழ்ச்சியின் போது, வளாகத்திலிருந்து குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக படையினர் "சிரமதான" திட்டத்தை மேற்கொண்டனர். அவர்கள் சுற்றுப்புறங்களையும் அனைத்து கட்டிடங்களையும் முழுமையாக சுத்தம் செய்ததுடன், மின்சார அமைப்பின் பழுதுபார்ப்புகளையும் மேற்கொண்டனர்..

மேலும், படையினர் அங்குள்ள அனைவருக்கும் தனிப்பட்ட கவனிப்பை வழங்கினர். இதில் முடி வெட்டுதல், குளிப்பாட்டுதல் மற்றும் தேவையுடையோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குதல் ஆகியவை அடங்கும். கலிப்சோ இசையுடன் கூடிய சுவையான மதிய உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஆண்டு நிறைவு நாளில், படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றிய அவர், அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டியதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரணப் பணிகளைப் பாராட்டினார்..

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்று நட்டியதுடன், அனைத்து நிலையினருடனும் குழுப்படம் எடுத்துக் கொண்டார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் நாள் நிறைவடைந்தது..