31st July 2025
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான சுவிஸ் தூதுவர் கௌரவ வைத்தியர் சிரி வால்ட் அவர்கள், 2025 ஜூலை 29 அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அவரை வரவேற்று, இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள், தொடர்பான சமூக உறவுத் திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய பொது கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
சந்திப்பின் முடிவில், நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசில்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் சுவிஸ் தூதுவர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுகளை பதிவிட்டார்.
இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுபணி பிரிகேடியர் எம்பீகேஎல் அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ என்டிசீ அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.