31st July 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஓய்வுபெறும் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணி படையினர் 2025 ஜூலை 28, அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கினர்.
வருகையின் போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பின்னர் வீரமரணம் அடைந்த போர் வீரர்கள் மற்றும் பீடப்ளியூவீ நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் படையணி அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் விதமாக, விடைபெறும் சிரேஷ்ட அதிகாரி குழு படம் எடுப்பதற்கு அழைக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
அதிகாரிகள் விடுதியில் நடைபெற்ற பிரியாவிடை இரவு விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.