2nd August 2025
இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பி.எம்.ஆர்.ஜே. பண்டார அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, 2025 ஜூலை 30 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் ஒரு முறையான விழாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவ மரபுகளின்படி, வருகையின் போது அவருக்கு பாதுகாலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள் அவரை அன்புடன் வரவேற்றனர். பின்னர், கேப்டன் சாலிய அலதெனிய பீடப்ளியூவீ அவர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் தனது உருவப்படத்தை திறந்து வைத்து, ஊழியர்களுடன் குழு படம் எடுத்து அன்றைய தினத்தை நினைவுகூர்ந்தார். அனைத்துப் படையினருக்கும் உரையாற்றிய பிரதி தளபதி, தனது பதவிக் காலத்தில் அனைத்துப் படையினரும் அளித்த உறுதி மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
அன்றைய தினம் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் நிறைவடைந்தது, இது வெளியேறும் பிரதி தளபதி அனைத்து படையினருடன் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. பின்னர், அவர் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் எழுதினார்.
அன்றைய சம்பிரதாய நிகழ்வுகள் பிரியாவிடை இரவு உணவோடு நிறைவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய சம்பிரதாய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.