31st July 2025
இலங்கை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மேத்யூ ஹவுஸ் அவர்கள் 2025 ஜூலை 26 அன்று 22 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களை 22 வது காலாட் படைப்பிரிவில் சந்தித்தார்.
இக் கலந்துரையாடலின் போது, இருதரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை நினைவு கூர்ந்தனர். நினைவுப் பரிசு பரிமாற்றதுடன் சுமூக சந்திப்பு நிறைவடைந்தது.