28th July 2025
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.பீ.பீ. குலதிலக்க என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது காலாட் படைப்பிரிவு, தனது 28 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஜூலை 23 ஆம் திகதி தொடர்ச்சியான நினைவு நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
2025 ஜூலை 22 ஆம் திகதி படைப்பிரிவு மற்றும் அதன் படையினருக்கு ஆசிர்வாதம் வேண்டி பல மத நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆண்டு நிறைவு நாளில், 7 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய நிகழ்வுகளில் குழுப்படம், சம்பிரதாய மரம் நடுதல் மற்றும் தளபதியின் உரை ஆகியவை இடம்பெற்றன. தளபதி தனது உரையின் போது அனைத்து நிலையினரின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், தொடர்ச்சியான தொழில்முறையை ஊக்குவித்தார்.
2025 ஜூலை 24 ஆம் திகதி படைப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மற்றும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவோடு அன்றைய நாள் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.