விஷேட படையணியினால் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை

விஷேட படையணி, வெளிச்செல்லும் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை அளித்தது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை நிலைய தளபதி மரியாதையுடன் வரவேற்றதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அவர் விஷேட படையணி படையினருக்கு உரையாற்றினார். மேலும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி, இரவு உணவின் போது நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.