10th August 2025
53 வது காலாட் படைப்பிரிவின் (அவசர கால தாக்குதல் படை) 32 வது தளபதியான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள், 2025 ஆகஸ்ட் 06 ஆம் திகதி தனது கடமைகளை ஒப்படைத்தார்.
வெளிச்செல்லும் தளபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேலும், 53 வது காலாட் படைப்பிரிவு (அவசர கால தாக்குதல் படை) மற்றும் அதன் கீழ் உள்ள பிரிகேட்கள், படையலகுகளின் அனைத்து படையினருக்கும் தளபதி உரையாற்றினார்.