படையணி சாஜன் மேஜர்களுக்கு ஒழுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 206 அதிகாரவணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன், பயிற்சி பணிப்பகத்தினால் 2025 ஒக்டோபர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஒழுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகளின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஒழுக்கம் இரண்டிலும் நெறிமுறைகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.