நாடு முழுவதும் பல்வேறு அவசர நிலைக்கு இராணுவத்தினர் உதவி

2025 ஒக்டோபர் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல அவசரநிலைகளுக்கு இராணுவத்தினர் உடனடியாக தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று மாவனல்லை அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தடம் புரண்டது. 8 வது இலங்கை சிங்க படையணியின் 48 படையினர் கொண்ட மூன்று குழுக்கள் புகையிரத பாதையை சுத்தம் செய்யவும் பயணிகள் மற்றும் புகையிரத சேவை ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் தங்கள் உதவிகளை வழங்கின.

அத்துடன், கேகாலை, இஹல கோட்டே புகையிரத நிலையத்தில் 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி புகையிரதம் தடம் புரண்டது. 8 வது இலங்கை சிங்க படையணி படையினர் புகையிரத பாதையின் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து புகையிரத சேவைகளை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கு புகையிரத அதிகாரிகளுடன் பணியாற்றினர்.

இதற்கிடையில், துன்ஹேன பகுதியில் பிடிகல-தவலம வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த மண்சரிவு அதே நாளில் விரைவாக அகற்றப்பட்டது. 61 வது காலாட் படைப்பிரிவின் 573 வது காலாட் பிரிகேட்டின் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் மண்மேடுகளை அகற்றி வாகன போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தாங்கள் உதவியை வழங்கினர்.

61 வது காலாட் படைப்பிரிவின் 573 வது காலாட் பிரிகேடின் கட்டளையின் கீழ் இயங்கும் 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால், 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி காலி மாவட்டத்தின் பியதிகம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது, வெள்ளபெருக்கில் சிக்கியிருந்த நால்வரில் ஒரு தாய் மற்றும் இரண்டு மாத குழந்தை இராணுவத்தினரால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் தற்காலிக தங்குமிடமாக அமைக்கப்பட்ட சுதர்ஷனாராமய விகாரைக்குக் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கை, காலி அனர்த்த முகாமைத்துவ நிலையம், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யப்பட்டது.