இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணிக்கு கிளிபோர்ட் சவால் கிண்ணம்

இலங்கை குத்துச்சண்டை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிபோர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி 2025 ஒக்டோபர் 15 முதல் 19 ஆம் திகதி வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 92 ஆண் மற்றும் 42 பெண் குத்துச்சண்டை வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இலங்கை இராணுவ ஆண்கள் அணி 10 எடைப் பிரிவுகளில் 07 தங்கம், 03 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறந்து விளங்கி பெறுமதிமக்க கிளிபோர்ட் சவால் கிண்ணத்தை வென்று இராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

அத்துடன், இராணுவ மகளிர் அணி 02 தங்கம், 06 வெள்ளி மற்றும் 01 வெண்கல பதக்கங்களை வென்று சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தியது.

51 கிலோ எடைப்பிரிவில் சிறந்த செயற்திறனுக்காக 3 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த சார்ஜன் எச்.எஸ். பிரியதர்ஷனி போட்டியின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவ குத்துச்சண்டை அணியின் தலைவர் மேஜர் ஜெனரல் பீ.கே.டப்ளியூ.டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பி.டப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ குத்துச்சண்டை அணி இப்போட்டியில் பங்கேற்றது.