செய்தி சிறப்பம்சங்கள்

தேசிய படகோட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40 வது தேசிய படகோட்ட சாம்பியன்ஷிப் போட்டி தியவன்னா படகோட்ட நிலையத்தில் 2025 ஜூலை 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.


இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள தொண்டர் படையலகுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் 34 வருட சிறப்பு மிக்க இராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஜூலை 24 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 22 ஆம் திகதி முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக விஜயம் மேற்கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 20 ஆம் திகதி குக்குலேகங்க லயா ஓய்வு விடுதிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.


இலங்கை இராணுவ தடகள வீரர்கள் முதலாவது சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையின் இராணுவ முய்தாய் போட்டியில் 09 வெண்கலப் பதக்கங்களை வென்று, சர்வதேச அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தனர். உலகெங்கிலும் உள்ள உயரடுக்கு இராணுவத்தினருக்கு எதிராகப் போட்டியிட்டு, போட்டி முழுவதும் திறமை, ஒழுக்கம் மற்றும் மீள்தன்மையை வெளிப்படுத்தினர்.


இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி மத்தேகொடை பொறியியல் இல்லத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் ரணவிரு எப்பரல் ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ சபையின் தலைவருமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 18 ஆம் திகதி யக்கலை ரணவிரு எப்பரல் தொழிற்சாலைக்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.


ரணவிரு சேவா அதிகாரசபையுடன் இணைந்து போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், தியதலாவை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஜூலை 30 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. ஊவா மாகாணத்தில் வசிக்கும் படைவீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.


இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி அவர்கள் 2025 ஜூலை 17 ஆம் திகதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.