14th November 2025
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 நவம்பர் 13 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:
மேஜர் ஜெனரல் எம் டபிள்யூ ஏ ஆர் சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 1991 நவம்பர் 17 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி எண் - 09 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் இராணுவ கல்வியற் கல்லூரி தியத்தலாவ ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1993 நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இராணுவ கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார்.
தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஜனவரி 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 நவம்பர் 19ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது அவர் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றுகின்றார்.
மேஜர் ஜெனரல் எம்டபிள்யூஏஆர்சீ விஜேசூரிய ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 3 வது புலனாய்வு இலங்கை கவச வாகன படையணியின் படைத் தலைவர், உதவி நிறைவேற்று அதிகாரி மற்றும் நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இலங்கை கவச வாகன பிரிகேட்டின் பொதுபணி நிலை அதிகாரி, 3 வது புலனாய்வு இலங்கை கவச வாகன படையணியின் 'ஏ' மற்றும் 'சி' படைப்பிரிவுகளின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிலிளவல் பிரிவில் குழு தளபதி மற்றும் பணி நிலை அதிகாரி 2 (பயிற்சி பயிற்றுவிப்பாளர்), இலங்கை கவச வாகன பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், கவசப் படையணி பயிற்சி நிலையத்தில் வர்த்தக பயிற்சிப் பிரிவின் பிரிவு தளபதி மற்றும் 5வது புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
சூடான் ஐக்கிய நாட்டு சபையின் இராணுவ மேற்பார்வை மற்றும் குழு தளத் தலைவராகவும் அவர் கடமையாற்றினார். 8வது மற்றும் 3வது (புலனாய்வு) இலங்கை கவசப் வாகன படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் நலன்புரி பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 1 (மேலதிக), லயா லெஷர் குக்குலேகங்கவில் பணி நிலை அதிகாரி 1, 52வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி) ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார். இலங்கை கவசப் வாகன படையணியின் பிரதி நிலைய தளபதியாகவும், கவசப் வாகன படையணி பயிற்சி நிலைய தளபதியாகவும், 232வது காலாட் பிரிகேட்டின் தளபதியாகவும், கவசப் வாகன படையணியின் தளபதியாகவும், 57வது காலாட் படைப்பிரிவின் பிரதி படைத் தளபதியாகவும், இராணுவப் போர் கல்லூரியின் பிரதி தளபதியாகவும், 12வது காலாட் படைப்பிரிவின் பிரதி படைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளதஞடன் 21வது காலாட் படைப்பிரிவின் தளபதியாகவும் அவர் பணியாற்றுகின்றார்.
இலங்கை இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, படையலகு நிர்வாக பாடநெறி, இராணுவ கண்காணிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பொதுமக்கள் பாதுகாப்பு பயிற்சியாளர்களுக்கான பயிற்சி பாடநெறி, ஐக்கிய நாடுகளின் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இந்தியாவில் இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி, பாகிஸ்தானில் கவச அதிகாரிகள் உயர் தொழில்நுட்ப பாடநெறி, பாகிஸ்தானில் கனிஷ்ட பணி நிலை (இடைநிலை தொழிற்கல்வி) பாடநெறி, இந்தியாவில் போர் குழு தளபதிகள் பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் ஆவுஸ்திரேலியாவில் அனர்த்த சுகாதார அம்சங்கள் குறித்த கோடைகாலம் தொடர்பான பாடநெறி போன்ற பல வெளிநாட்டு பாடநெறிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
ரன்டெம்பே தேசிய மாணவச் சிப்பாய் பயிற்சி நிலையத்தில் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனைப் பாடநெறியை அவர் நடாத்தியுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அமைப்புகள் சான்றிதழ் பாடநெறியையும், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் தொழில்முறை இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்களில் டிப்ளோமா பாடநெறியையும், இலங்கை அறக்கட்டளையில் ஆலோசனையில் உயர் தேசிய டிப்ளோமாவையும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்) பட்டத்தையும், சேர் ஜோன் கொத்தலாவல கல்வியற்கல்லூரியில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும் அவர் முடித்துள்ளார்.