2nd November 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 01 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் வழங்கல் தயார் நிலை என்பவற்றை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவ தளபதியை, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுடன் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பி.ஏ.பீ லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.
இவ் விஜயத்தின் போது இராணுவ தளபதி, தியத்தலாவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான 6 வது மருத்துவ முகாமில் கலந்துகொண்டார்.
நிகழ்வின் போது, இராணுவத் தளபதி மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு 350 மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. இவற்றில், 300 மூக்கு கண்ணாடிகள் இராணுவ சேவை வனிதையர் பிரிவால் வழங்கப்பட்டதுடன் மேலும் 50 மூக்குகண்ணாடிகள் கண் மருத்துவர் பி.ஏ.எஸ்.ஐ.ஏ. பமுனுசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கண் பராமரிப்பு நிறுவனத்தின் நிதியுதவியால் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும், தியதலாவை இராணுவ தள மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிட வளாகத்தை இராணுவத் தளபதி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் பணியாற்றும் அதிகாரிகளின் வசதி மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதன் நவீன வசதிகளை ஆய்வு செய்துடன் அவர் மருத்துவ ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி அவர்களால் கட்டளையின் கீழ் உள்ள படையினரின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நலன்புரி குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், இராணுவத் தளபதி தலைமையகத்தில் உள்ள கோப்ரல்கள் உணவகம் மற்றும் சிப்பாய்கள் உணவகத்தையும் ஆய்வு செய்தார்.
மேலும், இராணுவ தளபதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி உட்பட, அந்தப் பகுதியில் உள்ள கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளைப் பார்வையிட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.