செய்தி சிறப்பம்சங்கள்

தென் கொரியாவின் குமியில் 2025 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ தடகள வீரர்கள் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.


இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், காயமடைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நலன் மற்றும் நிருவாக விடயங்களை ஆராய்வதற்காக ஒருங்கிணைப்பு நிலையங்கள் 2025 மே 26 முதல் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் நிறுவப்பட்டன.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டி.ஏ. பீரிஸ் பிடிஎஸ்சீ, அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 மே 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இலங்கை இராணுவத்தில் இருந்து 34 வருட சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன், 2025 மே 30 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.


கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் 2025 மே 29 ம் திகதி அன்று நடைபெற்ற மாணவர் தலைவர் தின நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றனர்.


பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 மே 26 மற்றும் 27 ம் திகதிகளில் 6 வது இலங்கை கள பொறியியல் படையணி மற்றும் 7 வது இலங்கை கள பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.


சர்வதேச விளையாட்டு பேரவையின் பொதுச் சபை மற்றும் 80 வது மாநாட்டு 2025 மே 17 முதல் 25 வரை கொழும்பு கிராண்ட் மைட்லேண்ட் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இராணுவ விளையாட்டு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு பங்களித்த ஒன்பது புகழ்பெற்ற இராணுவ வீரர்களுக்கு கௌரவ பதக்கங்கள் மற்றும் "நைட்" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.


2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.


வடமத்திய மாகாணத்தில் வசிக்கும் முன்னாள் போர் வீரர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், அனுராதபுரம் அபிமன்சல 1 நலவிடுதியில் 2025 மே 27 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் சேவையிலுள்ள இராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.