2025-11-07

மறைந்த பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) அவர்களுக்கு இராணுவத்தின் இறுதி மரியாதை

விஜயபாகு காலாட் படையணியின் மறைந்த பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் 2025 நவம்பர் 04 அன்று, களனி புனித தெரசா தேவலாய மயானத்தில், இராணுவத்தின் இறுதி மரியாதை வழங்கப்பட்டது.


இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய படையினர், தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பூதவுடலை தாங்கிய பேழை பீரங்கி வண்டியில் வைப்பதற்கு முன்பு மயானத்தின் நுழைவாயிலில் ஆயுத மரியாதை வழங்கினர்.


இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகள் குழு ஒன்று பூதவுடலை தாங்கிய பேழையை முறையாக பெற்றுக்கொண்டு இராணுவ அதிகாரிகள்,குடும்ப உறுப்பினர்களுடன் பேழைக்கு பின்னால் அணிவகுத்து சென்றனர்.


இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வெளியிடப்பட்ட முறையான விசேட கட்டளை பகுதி I கூடியிருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வீரமரணம் அடைந்த அதிகாரிக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இராணுவ மரியாதையான அடையாள துப்பாக்கி மரியாதை செலுத்தப்பட்டது.


புகழ்மிகு வீரர் அவரது இறுதி ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பலுடன் பூதவுடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


அதனை தொடர்ந்து, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர். ஜயகொடி ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுடன் இணைந்து மறைந்த பிரிகேடியர் டி.சி.ஜே.டபிள்யூ. ஜயசேகர (ஓய்வு) அவர்கள் தனது சிறந்த இராணுவ வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.


மறைந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அஞ்சலி செலுத்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் துயரப்படுவர்கள் கலந்து கொண்டனர்.


இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட கட்டளை பகுதி 1 பின்வருமாறு: