செய்தி சிறப்பம்சங்கள்

நாடு முழுவதும் நிவாரணப் பணிகளுக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, 47 USAR பணியாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் மனிதாபிமான உதவிக் குழு, பாகிஸ்தான் K-9 பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற இராணுவ நாய்கள் மற்றும் அதிகளவான நிவாரணப் பொருட்களுடன், C-130 விமானத்தில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தது.


இலங்கைக்கான ஜெர்மனியின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் கிளாஸ் மெர்கல் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மார்கோ ஹெல்கிரேவ் ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.


அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எல்.டி. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்.ஏ.ஐ. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஆகியோர் 2025 டிசம்பர் 05 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடனான சம்பிரதாய சந்திப்பின் போது, அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.


இராணுவத் தளபதி 11 வது காலாட் படைப்பிரிவிற்கு பொறுப்பான பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, நடைபெற்று வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.


இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு நெஸ்லே ஸ்ரீலங்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது. 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ரூ. 8.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான நெஸ்கெபே, நெஸ்டி மற்றும் நெஸ்டோமால்ட் தயாரிப்புகளை நன்கொடையாக வழங்கியது.


இராணுவத் தலைமையக வழங்கல் கட்டளை தளபதியும், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆரச்சி அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தலைமையகத்தின் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 03 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.


இந்திய இராணுவ பரா கள வைத்திய குழுவை சேர்ந்த 73 மருத்துவப் பணியாளர்கள், முழுமையாகச் செயற்படும் கள மருத்துவமனையுடன் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.


தித்வா சூறாவளிக்குப் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ. 500,000.00 பெறமதியான பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் 2025 நவம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.