6th November 2025
இலங்கை இலேசாயுத காலாட் படையணி தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்த வீரமிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இராணுவ மரபுகளுக்கமைய, 2025 நவம்பர் 05 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில், வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் அஞ்சலி நிகழ்வை இலங்கை இலேசாயுத காலாட் படையணி 144 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து நடத்தியது.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வருகை தந்த பிரதம விருந்தினரை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்றார்.
இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் படையணி தலைமையக போர் வீரர்களின் நினைவு தூபியில் போரின் நீடித்த தியாகம், வீரம் மற்றும் வீரச்சரித்திரம் எழுதியவர்களை கௌரவிக்குமுகமாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தலின் மற்றொரு பகுதியாக, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் வருடாந்த பிரித் பாராயண நிகழ்வை ஏற்பாடு செய்ததுடன் மேலும் 2025 ஒக்டோபர் 06 அன்று மறைந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆசிக்காக ஒரு அன்னதானமும் வழங்கப்பட்டது.