இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் ஏற்பாட்டில் நலத்திட்டம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி லயன்ஸ் சர்வதேச மாவட்டம் 306 D6 உடன் இணைந்து, "இரக்கத்தின் கரங்களால் போற்றப்படும் தேவையில் உள்ள இதயங்களின் எடைகள்" என்ற தலைப்பில் ஒரு பெரிய அளவிலான தொண்டு திட்டத்தை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் 2025 நவம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட இந்த முயற்சி, பல நன்கொடை மற்றும் மருத்துவ சேவை திட்டங்களின் மூலம் சமூக நலனை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

லயன்ஸ் மாவட்டம் 306 D6 இன் மாவட்ட ஆளுநர் லயன் மகேஷ் பொரலுகொட பீஎம்ஜேஎப் பீஎம்ஏபீ ஜேபீ மற்றும் லயன்ஸ் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பதில் அமைச்சரவை செயலாளரும் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளருமான லயன் மேஜர் துஷார சமரதுங்க (ஓய்வு) எம்ஏஎப் ஜேபீ ஆகியோர் சுமார் ரூ. 1,300,000.00 பெறுமதியான நன்கொடையை வழங்கினர். இந்த நன்கொடையில் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சத்துணவுப் பொதிகள், சிவில் ஊழியர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் நீண்டகால மருத்துவ சிகிச்சை பெறும் பிள்ளைகளுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும்.

மேலும், நடமாடும் கண் மருத்துவமனை, கண்புரை போன்ற நோய்களுக்கான விரிவான கண் பரிசோதனை மற்றும் தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான திட்டம், ஏராளமான நன்கொடையாளர்களை ஈர்த்தது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.