22nd July 2025
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூலை 20 ஆம் திகதி குக்குலேகங்க லயா ஓய்வு விடுதிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, பொது முகாமையாளர் விடுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். மேலும், விடுதியில் தங்குமிடம் மற்றும் பிரதான உணவகம், சமையலறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் வெளிகளப்பயிற்சி பிரதேசம் உள்ளிட்ட பல முக்கிய செயற்பாட்டுப் பகுதிகளில் ஆய்வு நடாத்தினார். புனரமைக்கப்பட்ட 214 மற்றும் 215 (இரட்டை அறை குடியிருப்பு) ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
குக்குலேகங்க லயா ஓய்வு விடுதியின் பொது முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.